கிரிக்கெட்

ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது ஏன்? பிசிசிஐ கொடுத்த விளக்கம்

Published On 2022-12-05 07:47 GMT   |   Update On 2022-12-05 07:47 GMT
  • ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
  • டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், விளையாடிய கடைசி 10 போட்டியில் ஒரு முறை கூட 30 ரன்களை தொடவில்லை. இதில் 5 போட்டியில் ரிஷப் பண்ட் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், பிசிசிஐக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில், வங்கதேச தொடரிலிருந்து ரிஷப் பண்ட் அதிரயாக நீக்கப்பட்டுள்ளார். பிளேயிங் லெவனில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்யும் பொறுப்பை கேஎல் ராகுல் பார்த்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பிசிசிஐ, ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி வருவதால், மருத்துவக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். பிசிசிஐ காசில் ரிஷப் பண்ட்க்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளனர். இதே போன்று மற்றொரு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல், முதல் ஒருநாள் போட்டியில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ, அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News