கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் கேப்டன் பதவியில் விலகியபோது டோனி மட்டுமே எனக்கு மெசேஜ் அனுப்பினார்- விராட்கோலி
- எனது போன் நம்பர் பலரிடம் இருக்கிறது.
- டோனியுடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன் எடுத்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது.
போட்டியின் முடிவில் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், எம்எஸ் தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் செய்தார். நிறைய பேரிடம் எனது எண் உள்ளது, ஆனால் யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. அவருடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது.
பாகிஸ்தானுடன் போட்டி கூடுதல் நெருக்கடியாகும். இதனால் இந்த ஆட்டத்தில் யாருக்கும் தவறு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.