கிரிக்கெட்

பும்ரா - ஜடேஜா - ரிஷப் பண்ட்

null

கடைசி நேரத்தில் பும்ரா அதிரடி- இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவிப்பு

Published On 2022-07-02 10:43 GMT   |   Update On 2022-07-02 10:57 GMT
  • பும்ரா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடனும் சமி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது நாளான இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளாது. இந்திய அணி வீரர்களில் ஒரு இன்னிங்சில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த பட்டியலில் பண்ட்-ஜடேஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

ஜடேஜா

தொடர்ந்து ஆடிய ஜடேஜா 104 ரன்னில் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து பும்ரா அதிரடியாக விளையாடினார். ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 4 பவுண்டரி 2 சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமனையில் இருந்த சிராஜ் 2 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பும்ரா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News