கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக விலகல்

Published On 2022-09-04 10:52 GMT   |   Update On 2022-09-04 10:52 GMT
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோதுகிறது.
  • இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசினார்.

துபாய்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோதுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி 2 போட்டி இதே போன்று பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை விட்டு கொடுக்காமல் நெருக்கடி தருவதில் தஹானி வல்லவர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தஹானி 4 ஓவர் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதே போன்று ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தஹானி 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அலி, இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக வீசியுள்ளார். 

Tags:    

Similar News