கிரிக்கெட்

ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் முதன்முறையாக 100 சிக்சர்களை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2024-04-26 09:49 GMT   |   Update On 2024-04-26 09:49 GMT
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 சிக்சர்களும், ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் 22 சிக்சர்களும்,
  • டெல்லிக்கு எதிராக 22 சிக்சர்களும் விளாசியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த சீசன் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி அணிகளுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. ஆர்சிபி-க்கு எதிரான முதல் போட்டியில் 287 ரன்கள் குவித்தது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்னாகும்.

நேற்று ஆர்சிபி-க்கு எதிராக 2-வது முறையாக மோதியது. இந்த போட்டியில் 207 இலக்கை எட்டமுடியாமல் 171 ரன்கள் எடுத்து 35 ரன்னில் தோல்வியை தழுவியது. ஆனால், இந்த போட்டியின் 2-வது ஓவரில் அபிஷேக் சர்மா சிக்ஸ் ஒன்று விளாசினார். இந்த சிக்ஸ் மூலம் இநத் ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் 100-வது சிக்ஸ் அதுவாகும்.

இதன்மூலம் ஒரு சீசனில் 100 சிக்சர்களை முதன்முறையாக கடந்துள்ளது. இதற்கு முன்னதாக 2022 சீசனில் 97 சிக்சர்களும், 2016-ல் 89 சிக்சர்களும், 2018-ல் 88 சிக்சர்களும் அடித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 சிக்சர்களும், ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் 22 சிக்சர்களும், டெல்லிக்கு எதிராக 22 சிக்சர்களும் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News