கிரிக்கெட் (Cricket)

ஐ.எல். டி20 கிரிக்கெட்: அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் எம்.ஐ. எமிரேட்ஸ்

Published On 2026-01-03 15:35 IST   |   Update On 2026-01-03 15:35:00 IST
  • அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
  • எம்.ஐ. எமிரேட்ஸ் 16.1 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியில் மும்பை எம்.ஐ. எமிரேட்ஸ்- அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் களம் இறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் அலிஷன் ஷராஃபு 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி சார்பில் கசான்ஃபர் 3 விக்கெட்டும், முகமது ரோகித் கான் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ. எமிரேட்ஸ் களம் இறங்கியது. அந்த அணியின் டாம் பாண்டன் 53 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், ஷாகிப் அல் ஹசன் 24 பந்தில் 38 ரன்களும் அடிக்க 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ. எமிரேட்ஸ் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

Tags:    

Similar News