null
டி காக்- வான் டெர் டுசென் சதம்: நியூசிலாந்துக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
- டி காக் 114 ரன்களிலும் வான் டெர் டுசென் 133 ரன்களிலும் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து டி காக்- வான் டெர் டுசென் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.
டி காக் 114 ரன்களிலும் வான் டெர் டுசென் 133 ரன்களிலும் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கிளாசென்- மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடினார். அதிரடி ஆட்டத்தை வேளிப்படுத்திய மில்லர் 30 பந்தில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான் டெர் டுசென் 133 ரன்களும் டி காக் 114 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.