கிரிக்கெட்

ஷிம்ரன் ஹெட்மயர்

விமானத்தை தவறவிட்ட ஹெட்மயர் - டி20 உலக கோப்பையிலிருந்து நீக்கம்

Update: 2022-10-04 19:03 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவறவிட்டார்.
  • இதனால் அவர் டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

செயின்ட் லூசியா:

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களை போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், உலக கோப்பை போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை ஹெட்மயர் தவறவிட்டார். இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஷிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக 34 வயதான ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News