கிரிக்கெட் (Cricket)

சாத் ஷகீல்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சாத் ஷகீல் முதல் சதம்- 3வது நாள் முடிவில் பாகிஸ்தான் 407/9

Published On 2023-01-04 21:55 IST   |   Update On 2023-01-04 21:55:00 IST
  • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது.
  • அபாரமாக ஆடிய சாத் ஷகீல் 124 ரன்களுடன் களத்தில் உள்ளார்

கராச்சி:

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 19 ரன்னிலும், ஷான் மசூத் 20 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 74 ரன்னுடனும், சாத் ஷகீல் 13 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சாத் ஷகீல், சர்ப்ராஸ் அகமது இணைந்து நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். சர்ப்ராஸ் அகமது 78 ரன்களில் வெளியேறினார். நிலைத்து ஆடிய சாத் ஷகீல் சதம் அடித்து அசத்தினார். இடதுகை ஆட்டக்காரரான அவருக்கு இது முதல் சதம் ஆகும். மறுபுறம் ஆகா சல்மான் 41 ரன்களுக்கும் , ஹசன் அலி 4 ரன்களுக்கும், நசீம் ஷா 4 ரன்களுக்கும் வெளியேறினர்.

இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை விட 42 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷகீல் 124 ரன்களுடனும், அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 3 விக்கெட், இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News