கிரிக்கெட்

டி20-யில் தொடந்து 4 முறை டக் அவுட்... மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

Update: 2023-03-27 10:20 GMT
  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
  • அவர் 2020-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் இடம் பிடித்தார்.

ஷார்ஜா:

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாபிக் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் தொடர்ந்து 4 முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். 

பாபர் அசாமுடன் ஷாபிக்

அவர் 2020-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் இடம் பிடித்தார். 2020-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 2 முறை டக் அவுட் ஆனார். அதன்பிறகு அணியில் இடம் பெறவில்லை. இதனையடுத்து மீண்டும் அணியில் இடம் பிடித்த அவர் முதல் டி20 போட்டியில் 2 பந்திலும் 2-வது போட்டியில் 1 பந்திலும் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News