null
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு
- சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் கடைசி 5 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்துள்ளது.
புனே:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 25-ல் நியூசிலாந்தும், 41-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.
1999-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை. உலகக் கோப்பையில் கடைசி 5 ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தொடர்ந்து தோற்றுள்ள தென்ஆப்பிரிக்கா அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம்.
போட்டிக்கான ஆடும் லெவன்:-
நியூசிலாந்து:
டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி.
தென்ஆப்பிரிக்கா:
பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, இங்கிடி.