கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்காளதேச வீரர்: முஷ்ஃபிகுர் ரஹிம் சாதனை

Update: 2023-03-21 05:40 GMT
  • அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் அடித்தார்.
  • 50 ஓவர் முடிவில் வங்காள தேச அணி 349 ரன்களை குவித்தது.

அயர்லாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காள தேசம் 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. டெத் ஓவர்களில் காட்டடி அடித்து 60 பந்தில் சதமடித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார்.

இந்த போட்டி மழை காரணமாக முடிவு இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News