கிரிக்கெட் (Cricket)

ஒன்றுபடுவோம்.. உதவி கரம் நீட்டுவோம்.. சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் வேண்டுகோள்

Published On 2023-12-05 15:32 IST   |   Update On 2023-12-05 15:32:00 IST
  • சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது.
  • இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் மீதும் பற்று கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடிய வார்னர், சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்று வாள் சுற்றி காண்பித்தார்.

புஷ்பா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நடனம் ஆடி காண்பித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படி இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் வார்னர்.


இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம், தேவைப்பட்டால் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருங்கள்.

நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதையோ பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்.

இவ்வாறு வார்னர் கூறினார்.



Tags:    

Similar News