கிரிக்கெட்

ருதுராஜ்-க்கு பதில் சுப்மன் கில் என்பது மிகப்பெரிய பாரபட்சம்: தேர்வுக்குழுவினர் மீது ஸ்ரீகாந்த் சாடல்

Published On 2024-05-01 12:09 GMT   |   Update On 2024-05-01 12:09 GMT
  • டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுகிறார்.
  • கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வாய்க்கு கிடைக்கவில்லை. ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஒருவேளை விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் ஜெய்ஸ்வால் ஆடும் லெவன் அணியில் இடம் பெறமாட்டார். ஒருவேளை காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக களம் இறக்க சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசிய விளையாட்டில் இவரது தலைமையில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 447 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக சுப்மன் கில்லை தேர்வு செய்தது முற்றிலும் பாரபட்சம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வாளருமான ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவினர் மீது சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

ருதுராஜ் கெய்க்வாட்டை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் தேர்வானது எனக்கு குழப்பமாக உள்ளது. சுப்மன் கில் அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட சிறப்பாக உள்ளார்.

சுப்மன் கில் தோல்வியடைந்த நிலையிலும், தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார். அவர் தேர்வாளர்களின் ஆதரவை பெறுள்ளார். இது மிகப்பெரிய பாரபட்சம்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News