கிரிக்கெட் (Cricket)
உலக கோப்பை 2023 - விராட் கோலி, சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தல்
- டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- ஆட்டத்தின் முதல் ஓவரில் ரோகித் சர்மா 4 ரன்னில் அவுட்டானார்.
மும்பை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
இந்திய அணி 22 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.