கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: விராட் கோலி அதிரடி.. கொல்கத்தாவுக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

Published On 2024-03-29 15:37 GMT   |   Update On 2024-03-29 15:37 GMT
  • விராட் கோலி சிறப்பாக ஆடி 83 ரன்களை குவித்தார்.
  • ரசல், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல துவக்கம் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். 

பிறகு வந்த கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. பெங்களூரு அணியின் விராட் கோலி 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

கொல்கத்தா அணி சார்பில் ரசல் மற்றும் ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுனில் நரைன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

Tags:    

Similar News