கிரிக்கெட்
null

ஐ.பி.எல். 2024: பெங்களூரு அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published On 2024-03-29 13:39 GMT   |   Update On 2024-03-29 13:40 GMT
  • இன்றைய போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.
  • பெங்களூரு அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. 

கொல்கத்தா அணி தொடர் வெற்றியை பெறும் நோக்கில் களம் காண்கிறது.

Tags:    

Similar News