கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் பெண் ஏலதாரர் மல்லிகா சாகர்.. யார் தெரியுமா?

Published On 2023-12-19 15:02 IST   |   Update On 2023-12-19 15:02:00 IST
  • பெண் ஏலதாரர் என்ற பெருமையை மல்லிகா சாகர் பெற்றுள்ளார்.
  • மல்லிகா சாகர் விளையாட்டு துறையில் நன்கு அறியப்படுகிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தை முதல் முறையாக ஒரு இந்தியர் முழுநேரமாக நடத்த இருக்கிறார். மேலும் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் முதல் முறையாக பெண் ஏலதாரர் என்ற பெருமையை மல்லிகா சாகர் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) ஏலத்திலும் மல்லிகா சாகர் ஏலதாரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 மற்றும் 2024 (டபிள்யூ.பி.எல்.) ஏலங்களில் ஏலதாரராக இருந்த மல்லிகா சாகர் விளையாட்டு துறையில் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

 


48 வயதான மல்லிகா சாகருக்கு ஏலம் விடும் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு முன்பு இவர் ப்ரோ கபடி லீக் ஏலங்களில் ஏலதாரராக இருந்துள்ளார். மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் கலை துறையிலும் அனுபவம் மிக்கவர் ஆவார்.

மும்பையில் உள்ள பண்டோல் கலை காட்சியகங்களில் பல்வேறு ஏலங்களில் இவர் ஏலதாரராக செயல்பட்டுள்ளார். உலக புகழ் பெற்ற கிரிஸ்டீஸ்-இல் ஏலதாரர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையை மல்லிகா சாகர் தனது 26-வது வயதிலேயே பெற்றிருந்தார். 

Tags:    

Similar News