ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்
- ஐதராபாத் அணிக்கு எதிராக சுப்மன் கில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை கில் நேற்று பதிவு செய்தார்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியும் குஜராத் அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிக்சர் அடிக்காமல் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை கில் முறியடித்துள்ளார்.
2010-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது டெல்லி அணிக்கு எதிராக 23 பந்துகளில் எந்த சிக்சரும் இல்லாமல் சச்சின் அரைசதம் அடித்திருந்தார். கில் நேற்றைய போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 22 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஒட்டுமொத்தமாக, அவர் இந்த சீசனில் 13 போட்டிகளில் 145-க்கும் அதிகமான ஸ்டிக்-ரேட்டில் 576 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கில் 50 ரன்களை எட்டிய பிறகு தனது இன்னிங்சில் மேலும் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடித்தார். அவர் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேனின் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.