கிரிக்கெட்

இனிமேலும் மெதுவா விளையாடாதீங்க.. சிஎஸ்கே வீரரை டீசல் எஞ்சினுடன் ஒப்பிட்ட ஆகாஷ் சோப்ரா

Published On 2023-03-29 12:25 GMT   |   Update On 2023-03-29 12:25 GMT
  • டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது.
  • உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன்.

சென்னை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

கடந்த முறை சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதனால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடததுதான் காரணம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது:-


நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன் பிறகு தான் அதிரடியை தொடங்கினார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்கி இருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அவர் பேட்டிங் ஆர்டரின் முன் வரிசையில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. எனினும் இம்முறை சென்னை அணி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மெதுவாக இன்னிங்சை தொடங்கி அதன் பிறகு தான் வேகத்தை கூட்டுவார்.

ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது. அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது. எனவே ருதுராஜ் வேகத்தை அதிகரிக்கக்கூடிய மின்சார வாகனம் போல் இருக்க வேண்டும்.

என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ருத்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு சீசன்னில் 635 ரன்கள் அடித்திருந்து அசத்தினார். மேலும் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் 368 ரன்கள் அடித்தார்.

Tags:    

Similar News