கிரிக்கெட்

ஹர்மன்பிரித் கவுர் அதிரடி - முதல் டி20 போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா

Published On 2023-07-09 11:04 GMT   |   Update On 2023-07-09 11:04 GMT
  • இந்திய மகளிர் அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
  • அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

டாக்கா:

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது.

ஷதி ராணி 22 ரன்னும், ஷமிமா சுல்தானா 17 ரன்னிலும் அவுட் ஆகினர். சோபனா மோஸ்தரி 23 ரன்னிலும், நிகர் சுல்தானா 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 38 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக ஆடி 35 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 54 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News