கிரிக்கெட்

வடிவமைக்கப்பட்ட எம்.எஸ்.டோனி, விராட் கோலி படங்கள்.

ஒரே போர்வையில் இருபுறமும் 2 கிரிக்கெட் வீரர்களின் படங்கள்: சென்னிமலை வடிவமைப்பாளர் சாதனை

Published On 2023-03-25 04:58 GMT   |   Update On 2023-03-25 04:58 GMT
  • 30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த போர்வையை அப்புசாமி உருவாக்கியுள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் உருவாக்கி வந்தார்.

சென்னிமலை:

சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அப்புசாமி என்பவர் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் உருவாக்கி வந்தார்.

அந்த வகையில் தற்போது கடந்த 2 மாதங்களாக பல முயற்சி செய்து இறுதியில் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.டோனியின் படம் ஒருபுறமும், மற்றொருபுறம் விராட் கோலி உருவ படத்தையும் வடிவமைத்துள்ளார்.

30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த போர்வையை அப்புசாமி உருவாக்கியுள்ளார். கைத்தறி துணிகளில் இருபுறமும் ஒரே டிசைன் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News