கிரிக்கெட் (Cricket)

காசோலை முறைகேடு வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது

Published On 2024-01-31 21:35 IST   |   Update On 2024-01-31 21:35:00 IST
  • வைத்யா தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
  • காசோலை முறைகேடு வழக்கில் வைத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர் இந்தியாவுக்காக 1990-களில் 4 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். வைத்யா தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் காசோலை முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் இருந்து ஸ்டீல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணத்தை காசோலையாக வழங்கினார். எனினும் அவரது வங்கி கணக்கில் போதுமான தொகை இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆனது.

அதைத் தொடர்ந்து வியாபாரி பணம் செலுத்துமாறு கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் பணம் செலுத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே வியாபாரி நீதிமன்றத்தை நாடினார். அவர் நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்த்ததற்காக அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News