கிரிக்கெட் (Cricket)
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியும் மழையால் ரத்து
- இன்றைய 2 போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது.
- இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதற்கு முன்பு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கவிருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.