கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டியில் டேவிட் மலான் சதம்- ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2022-11-17 07:59 GMT   |   Update On 2022-11-17 07:59 GMT
  • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேசன் ராய் 6 ரன்னில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது. ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.

அவர் 134 ரன்னில் சம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News