கிரிக்கெட் (Cricket)

விமல்குமார், ஷிவம் சிங் அரை சதம் - நெல்லையை வீழ்த்தியது திண்டுக்கல்

Published On 2023-07-01 22:45 IST   |   Update On 2023-07-01 22:45:00 IST
  • முதலில் ஆடிய நெல்லை 159 ரன்களை எடுத்தது.
  • அடுத்து ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்து வென்றது.

7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.

நெல்லையில் டிஎன்பிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 39 ரன் எடுத்தார். ஹரீஷ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. விமல் குமார், ஷிவம் சிங் இருவரும் அரை சதமடித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் சிங் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 62 ரன் எடுத்த நிலையில் விமல் குமார் ரன் அவுட்டானார்.

இறுதியில், திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது திண்டுக்கல் அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது.

Tags:    

Similar News