கிரிக்கெட்
null

டோனி- பிளெமிங் மாதிரி நாங்களும் இருக்கணும்.. பென் ஸ்டோக்ஸ்

Published On 2024-01-31 12:33 GMT   |   Update On 2024-01-31 12:35 GMT
  • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
  • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News