கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- இந்திய அணியில் இணைந்த ஆவேஷ் கான்

Published On 2023-12-29 14:20 IST   |   Update On 2023-12-29 14:20:00 IST
  • முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் சீனியர் வீரரான முகமது சமி இடம் பிடித்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் இந்த தொடரில் இணைந்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.

Tags:    

Similar News