கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி 

இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

Update: 2022-06-24 19:25 GMT
  • ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
  • முதலில் விளையாடிய இலங்கை 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில்.இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் தனுஷ்க குணதிலக்க 8 ரன்னுக்கும், மற்றொரு வீரர் பாத்தும் நிசங்கா 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். குசல் மெண்டிஸ் 26 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக சாமிக கருணாரத்னே 75 ரன்கள் குவித்தார்.

இலங்கை அணி 43.1 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 39.3 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிபட்சமாக அலெக்ஸ் கேரி 45 ரன்களும், மார்னஸ் லாபுசேன் 31 ரன்களும் குவித்தனர்.  

Tags:    

Similar News