கிரிக்கெட்

5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்.. அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை

Published On 2023-12-17 12:53 GMT   |   Update On 2023-12-17 12:53 GMT
  • முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
  • இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஜோகனஸ்பெர்க்:

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.


இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்:-

சுனில் ஜோஷி 5/6 - 1999

சாஹல் 5/22 - 2018

ஜடேஜா 5/33 - 2023

அர்ஷ்தீப் சிங் 5/37 - இன்று

Tags:    

Similar News