கிரிக்கெட் (Cricket)

பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அசத்துகிறார்: டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் இவர்தான்- டிவில்லியர்ஸ்

Published On 2023-03-07 16:18 IST   |   Update On 2023-03-07 16:18:00 IST
  • இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
  • பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.

ஜோகன்ஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-


எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.

பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.

இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News