கிரிக்கெட் (Cricket)
20 ஓவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு ரூ.8¼ கோடி பரிசுத் தொகை
- இறுதிப் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.4.13 கோடி பரிசு பெற்றது.
- அரை இறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
கேப்டவுனில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அந்த அணி ஏற்கனவே 2010, 2012, 2014, 2018, 2020-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.8.27 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.14.48 லட்சமும் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.4.13 கோடி பரிசு பெற்றது. அரை இறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டது.