கிரிக்கெட்

கேப்டனாக அறிமுக போட்டியில் டக் அவுட் ஆன 3-வது வீரர்: மோசமான சாதனை படைத்த குர்ணல் பாண்டியா

Published On 2023-05-04 11:05 GMT   |   Update On 2023-05-04 11:05 GMT
  • சென்னை- லக்னோ அணியின் ஆட்டம் மழையால் கைவிட்டப்பட்டது.
  • இதனால் இரு அணியினருக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக கேப்டனாக அறிமுகமான குர்ணல் பாண்டியா முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி சாதனை படைத்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 19.2 ஓவரில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிட்டப்பட்டது. இதனால் இரு அணிக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக களமிறங்கிய குர்ணல் பாண்டியா வந்த வேகத்தில் கோல்டன் டக் முறையில் தீக்ஷனா பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த அஜிங்கியா ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலமாக ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்கரம், லக்னோவிற்கு எதிரான போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் ஜார்ஜஸ் அணியின் கேப்டனாக இருந்த விவிஎஸ் லட்சுமணன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News