தலைப்புச்செய்திகள்
அஜித்

அஜித்தின் அடுத்த படத்தின் புதிய லுக் - தீயாய் பரவும் புகைப்படம்

Published On 2022-02-15 22:01 IST   |   Update On 2022-02-15 22:01:00 IST
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.
சென்னை:

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்படத்தையும் (ஏகே 61) வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனிக்கபூர் வெளியிட்டுள்ளார்.



காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வித்தியாசமான லுக்குடன் அஜித் இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. 

அந்த கெட்டப்பில் தான் அஜித் புதிய படத்தில் தோன்ற உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது டார்க் ஷேட் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக போட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News