தலைப்புச்செய்திகள்
இயக்குநர் பா ரஞ்சித்துடன் நடிகர் கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் சாதி இருக்கிறது - கமல் பேச்சுக்கு பா.ரஞ்சித் பதில்

Published On 2021-12-19 11:16 IST   |   Update On 2021-12-19 11:16:00 IST
தமிழ் சினிமாவில் சாதி வேற்றுமை நிலவுகிறது என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 14-ம் தேதி இசைவெளியிட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவிற்கு சாதி, மதம் எதுவும் கிடையாது. யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, சினிமாவிற்கு சாதி மதம் கிடையாது. இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும்தான் என்று பேசியிருந்தார். இந்நிலையில் கமலின் இந்த கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாத்துறையில் சாதி வேற்றுமை இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கிறேன். அவற்றை நான் உணரவும் செய்கிறேன் என பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார்.

Similar News