சினிமா
முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி

5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் - முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்

Published On 2021-05-28 14:51 IST   |   Update On 2021-05-28 16:27:00 IST
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சாந்தினி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், கருவுற்ற தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். 



இதனிடையே தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் சாந்தினி. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

Similar News