சினிமா
கொம்பு பட போஸ்டர்

கொம்பு

Published On 2020-12-09 15:05 IST   |   Update On 2020-12-09 15:05:00 IST
இப்ராகிம் இயக்கத்தில் லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்பு படத்தின் முன்னோட்டம்.
லொள்ளு சபா ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம்  " கொம்பு ". திஷா பாண்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாண்டியராஜன், சுவாமிநாதன் என பலர் நடித்துள்ள இந்த படத்தை  சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் பன்னீர்செல்வம், வானதி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் இப்ராகிம் இயக்கி உள்ளார். சுதீப் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தேவ் குரு இசையமைத்துள்ளார். கிரீசன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, " இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகும்.ஒரு ஊரில் ஆவிகளின் அட்டகாசத்தை அடக்க மாட்டுக் கொம்பு பயன்படுத்துவதை கேள்விப்பட்ட ஆராய்ச்சி மாணவியான திஷா பாண்டே அந்த ஊருக்கு வருகிறார். நாயகனை சந்திக்கிறாள். அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் திகிலாகவும் காமெடியாகவும் இருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன்" என்று கூறினார். 

Similar News