சினிமா
ஓமணப்பெண்ணே பட போஸ்டர்

ஓமணப்பெண்ணே

Published On 2020-12-04 15:05 IST   |   Update On 2020-12-04 15:05:00 IST
கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓமணப்பெண்ணே படத்தின் முன்னோட்டம்.
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பெல்லி சூப்பலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு தான் ஓமணப்பெண்ணே. ஹரீஸ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். “ஹரீஸ் கல்யாண் நடித்த ‘தாராள பிரபு,’ ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய 2 படங்களும் வெற்றிகரமாக ஓடியதால், ‘ஓமணப்பெண்ணே’ படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது” என்கிறார், படத்தின் டைரக்டர் கார்த்திக் சுந்தர். 

“இந்த படத்துக்குப்பின் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும்” என்று தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்சா ஆகிய இருவரும் சொல்கிறார்கள். “படத்தின் கதைப்படி, ஹரீஸ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் என்ஜினீயரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். 

படம் முழுவதும் சென்னையில் வளர்ந்து இருக்கிறது. 30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டோம். இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன” என்கிறார், டைரக்டர் கார்த்திக் சுந்தர்.

Similar News