எஸ்.சுரேஷ்குமார் இயக்கத்தில் சித்தார்த், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் அகடு படத்தின் முன்னோட்டம்.
அகடு
பதிவு: நவம்பர் 26, 2020 15:00
அகடு படக்குழு
“இந்தியாவில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக சமூகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் பாலியல் வன்முறைகள் குறையவில்லை. இந்த கருவை அடிப்படையாக வைத்து, ‘அகடு’ படத்தை உருவாக்கி வருகிறோம்” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் எஸ்.சுரேஷ்குமார்.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இவர் மேலும் சொல்கிறார்: “பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘அகடு’ படம் தயாராகி இருக்கிறது. பதற்றத்தை தூண்டும் திரைக்கதை. கொடைக்கானலுக்கு 4 இளைஞர்கள் சுற்றுலா வருகிறார்கள். காமவெறி கொண்ட அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை விடியல் ராஜூ தயாரிக்கிறார். ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. படத்தின் இணை தயாரிப்பு: யுவராஜ் சிங்காரவேலு.”