சினிமா
மிடில் கிளாஸ்

மிடில் கிளாஸ்

Published On 2020-11-05 18:17 IST   |   Update On 2020-11-05 18:17:00 IST
கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மிடில் கிளாஸ் படத்தின் முன்னோட்டம்.
'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் மிடில் கிளாஸ் என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். 
 
'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

 ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 

Similar News