சினிமா
லிப்ட் பட போஸ்டர்

லிப்ட்

Published On 2020-08-03 09:00 GMT   |   Update On 2020-08-03 08:46 GMT
அறிமுக இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர் நடிப்பில் உருவாகி இருக்கும் லிப்ட் படத்தின் முன்னோட்டம்.
ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரிக்கும் படம் ‘லிப்ட்’. கவின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர். யுவா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 



பாடல்களிலும் பின்னணி இசையிலும் மைக்கேல் பிரிட்டோ அசத்தி இருக்கிறார். ஸ்டன்னர் சாம் இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் கதை மீதும் படத்தில் பங்காற்றியவர்கள் மீதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த நம்பிக்கைக்கு நற்சான்றாக படம் உருவாகி இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
Tags:    

Similar News