சினிமா
மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் மதியழகன் நடிக்கும் பிதா படத்தின் முன்னோட்டம்.
மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'பிதா'. படத்தின் இயக்குனர் ஆதித்யா, ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கியவர். இயக்குனர் மிஷ்கினின் தம்பி. ராதாரவி, ரமேஷ் திலக், கலையரசன், புதுமுகம் அனுகீர்த்திவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு தந்தைக்கும், மகளுக்குமான பாசத்தை அடிப்படையாக கொண்ட திகில் படம், இது. காணாமல் போன மகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பரிதாபத்துக்குரிய தந்தையின் தேடலே திரைக்கதை. அந்த தந்தையின் தீவிரமான தேடலில் ஏற்படும் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது. அப்பாவாக மதியழகன் நடிக்கிறார்.