சினிமா
சந்தீப் கிசன்

அசுரவம்சம்

Published On 2020-03-09 14:29 IST   |   Update On 2020-03-09 14:29:00 IST
கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்தீப் கிசன், ரெஜினா கசான்ட்ரா, ஸ்ரேயா நடித்துள்ள அசுரவம்சம் படத்தின் முன்னோட்டம்.
லட்சுமி வாசந்தி புரொடக்‌ஷன் சார்பாக ஏ.வெங்கட்ராவ் மற்றும் எஸ் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக சேலம் பி.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் "அசுரவம்சம்". 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற "நட்சத்திரம்" படத்தின் தமிழாக்கமே இந்த "அசுரவம்சம்". இந்த படத்தில் சந்தீப் கிசன் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ரெஜினா கசான்ட்ராவும் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, சாய் தருண் தேஜ், பிரக்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன் காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷனர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷனர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா வம்சி. 

Similar News