சினிமா
ஆதித் அருண்

ரீல் அந்து போச்சு

Published On 2020-03-08 18:25 IST   |   Update On 2020-03-08 18:25:00 IST
அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கத்தில் ஆதித் அருண் நடிப்பில் உருவாகி வரும் ரீல் அந்து போச்சு படத்தின் முன்னோட்டம்.
“காலிடஸ் மீடியா” தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கும் “ரீல் அந்து போச்சு”.இப்படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இப்படத்திற்கு நந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓமர் பணிபுரிகிறார். பாஸ்கர் சுப்ரமணியன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். காலிடஸ் மீடியா சார்பில் வி.கே.மதன் மற்றும் குர்ரம் கௌதம் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.



படம் குறித்து நாயகன் ஆதித் அருண் கூறியதாவது: “இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாகள்  நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன். சினிமா தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் “ரீல் அந்து போச்சு”, என்றார்.

Similar News