சினிமா
ராஜா கஜினி இயக்கத்தில் ரோஷன், ஹிரோஷினி கோமலி, பிரியங்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உற்றான்’ படத்தின் முன்னோட்டம்.
ராஜா கஜினி இயக்கி தயாரிக்கும் திரைப்படம் உற்றான். இப்படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். மேலும் வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியங்கா, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்.ஆர்.ரகுனந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஹோலிக் பிரபு ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
1994ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை தான் இது. காதலால் கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளதாக இயக்குனர் ராஜா கஜினி தெரிவித்துள்ளார்.