சினிமா
சல்மான் கான்

தபாங் 3

Published On 2019-12-17 12:47 IST   |   Update On 2019-12-17 12:47:00 IST
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி இருக்கும் “தபாங் 3” படத்தின் முன்னோட்டம்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார். அர்பாஸ்கான், மாஹி கில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன்  வேடத்தில் ’நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.



படம் குறித்து இயக்குனட் பிரபுதேவா கூறியதாவது: இந்தப் படம் செய்ய முடிவான போது என்னை இயக்குவதற்கு அழைத்தார் சல்மான். படம் ஆரம்பிக்கும்போதே இதை நான்கு மொழிகளிலும் செய்யலாம் என்று சொல்லிவிட்டார். அப்போது முதலே அதற்காக உழைத்தோம். இது அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் கதை, எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

Similar News