சினிமா
மழையில் நனைகிறேன் படக்குழு

மழையில் நனைகிறேன்

Published On 2019-11-29 13:49 IST   |   Update On 2019-11-29 13:49:00 IST
அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கத்தில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் மழையில் நனைகிறேன் படத்தின் முன்னோட்டம்.
ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் திரைப்படம் “மழையில் நனைகிறேன்”. மேலும் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். 

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான  கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. 



ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News