சினிமா

தொரட்டி

Published On 2018-04-25 01:58 GMT   |   Update On 2018-04-25 01:58 GMT
பி.மாரிமுத்து இயக்கத்தில் ஷமன்மித்ரூ - சத்யகலா நடிப்பில் ஆடுமேய்ப்பவர்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி இருக்கும் ‘தொரட்டி’ படத்தின் முன்னோட்டம்.
ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ‌ஷமன்மித்ரூ தயாரித்துள்ள படம் ‘தொரட்டி’. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியல் பற்றி சித்தரிக்கிறது.

இந்த படத்தில், புதுமுகம் ‌ஷமன்மித்ரூ நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சத்யகலா அறிமுகமாகிறார். இவர்களுடன் சுந்தர்ராஜ், ஜெயசீலன், முத்துராமன், அழகு, குமணன், ஜானகி, ஸ்டெல்லா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - குமார் ஸ்ரீதர், பாடல்கள் - சினேகன், இசை - வேத்சங்கர், பின்னணி இசை - ஜித்தின் ரோ‌ஷன், படத்தொகுப்பு - ஏ.எம்.ராஜா முகமது, வசனம், இயக்கம் - பி.மாரிமுத்து. படம் பற்றி இயக்குநர் கூறும் போது, 



“ ‘தொரட்டி’ என்பது கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் கருவி. நீண்ட கம்பு ஒன்றின் முனையில் சிறிய அரிவாள் ஒன்றை கட்டிவைத் திருப்பார்கள். இது ஆடுகளுக்கு இலை, தழைபறிக்க பயன்படும். தேவைப்படும் போது பாதுகாப்பு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1980-களில் விளை நிலைங்களில் ஆட்டுக்கிடை போட்டு பிழைப்பு நடத்திய, கீதாரி குடும்பங்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமே ‘தொரட்டி’. 

ஆடு மேய்ப்பவர்களின் கண்ணீர் வாழ்க்கையின் பதிவு இது. இவர்களுக்குள் கொலை, கொள்ளை செய்யத்துணியும் ஒரு கருப்பு ஆட்டு கூட்டம் நுழைகிறது. இதனால் இயல்பான மனிதர்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை தெளிவாக படமாக்கி இருக்கிறோம்” என்றார். 
Tags:    

Similar News