சினிமா

புறா பறக்குது

Published On 2018-04-24 07:36 IST   |   Update On 2018-04-24 07:36:00 IST
ஆ.லட்சுமி காந்தன் இயக்கத்தில் ஆருண், கவுதம் நடிப்பில் காதலை மையப்படுத்தி உருவாகும் ‘புறா பறக்குது’ படத்தின் முன்னோட்டம். #PuraParakkuthu
மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஆ.லட்சுமி காந்தன். ‘டாக்சி 4777’ படத்தை இயக்கிய இவர் தற்போது ‘புறா பறக்குது’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் புதுமுகங்கள் ஆருண், கவுதம் ஆகியோரை அறிமுகம் செய்கிறார். இவர்களுடன் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர். லட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்கிறார். கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் மணி படத்தொகுப்பு செய்கிறார். டி.தியாகராஜன் சண்டைபயிற்சி அளிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் லட்சுமி காந்தனிடம் கேட்ட போது...

“காதலை மையமாக வைத்து பல படங்கள் வந்தாலும் இது ஒரு புதுவிதமான காதல் கதை. இளைஞன் ஒருவன் ஆரம்ப காட்சியில் ஒரு பெண்ணை பார்த்ததும் தனக்கு அவள் தான் என முடிவு செய்கிறான். கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான். இதற்கிடையே காதலியின் மனதை அவன் எப்படி வெல்கிறான்? என்பதை திரைக்கதையில் வித்தியாசப்படுத்தி காட்டுவதே இதன் கதை.



இந்த படத்தில்ஆர்யா, ஷியாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல்,வி.ஜே. முரளி என ஒரு நட்சத்திர பட்டாளமே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். அது ஏன் என்பது சஸ்பென்ஸ்” என்றார். #PuraParakkuthu 

Similar News