சினிமா

குந்தி

Published On 2018-04-12 14:53 IST   |   Update On 2018-04-12 14:53:00 IST
பண்ணாராயல் இயக்கத்தில் அபினவ் - பூர்ணா நடிப்பில் பேய் படமாக உருவாகி இருக்கும் ‘குந்தி’ படத்தின் முன்னோட்டம்.
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார் தயாரிக்க எஸ்எப்எப் டி.வி இணைந்து வழங்கும் படம் ‘குந்தி’.

இதில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக அபினவ் வருகிறார். இவர்களுடன் ஆடுகளம் கிஷோர், அபிமன்யூ சிங், பேபி தன்வி, பேபி கிருத்திகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கர்ணா ஒளிப்பதிவு செய்கிறார். யஜமன்யா இசை அமைக்கிறார். எஸ்.எப்.எப்.டி டி.வி. காளிராஜ், சந்திரபிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்கள். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதுகிறார். தயாரிப்பு - மே.கோ.உலகேசுகுமார். இயக்கம் - பண்ணாராயல்.

தெலுங்கில் ‘ராட்சஷி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘குந்தி’ என்ற பெயரில் தயாராகிறது.



தனது கணவர், இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. ஒரு பேய் அவரது குழந்தைகளை கொல்ல துடித்துக்கொண்டிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை பூர்ணா எப்படி காப்பாற்றினார் என்பது திரைக்கதை.

முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். இது அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல். விரைவில் ‘குந்தி’ திரைக்கு வருகிறது” என்றார்.

Similar News